|
(Mental Satisfaction) யைத் தருவது சந்திரன் தான். ஒரு ஜாதகத்தில் சந்திரனும், ஐந்தாம் வீட்டிற்குரிய கிரகமும் (Lord of the 5th house, House of Mind) நன்றாக இருந்தால்தான் மனம் தெளிவு உடையதாக இருக்கும்
ஐந்தாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் அவை மனதைக் குழப்பிக் கொண்டே இருக்கும், சாதாரண விஷயத்திற்குக் கூடக் கவலைப் பட வைத்துக் கொண்டிருக்கும். அதற்கு என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடியாது! நமக்கு நாமேதான் தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டும். "போனால் போகட்டும் போடா" என்று எவ்வளவு பெரிய பிரச்சினை யையும் உள் வாங்கிக் கொள்ளாமல், அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டும். அதற்குத்தான் ஜாதகம் பார்ப்பது! பார்த்துத் தெரிந்து கொண்டபின், சரி நாம் இவ்வளவு உயரம்தான் - குருவியைப் போல பறக்க முடியும் புறாவையும், கழுகையும் பார்த்து நாம் ஆசைப் படக்கூடாது என்று தெளிந்து தேற வேண்டும். நம் ஜாதகம் கவலைப் படுகிற ஜாதகம், ஆகவே இன்று எது நடந்தாலும் கவலைப் படக்கூடாது, என்று காலையில் எழுந்தவுடன் ஒன்றிற்கு மூன்று முறை சொல்லி மனதைக் காலையிலேயே கடிவாளம் போட்டுப் பிடித்து கொள்ள வேண்டும்! |