| பலன் தரும் சனீஸ்வர விரதம் |
|
அஷ்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச்சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்வதால் தொல்லைகள் குறைவதோடு நன்மை உண்டாகும். பெருமானை வணங்கி நவக்கிரக சந்நிதியிலே நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!
என்று தோத்திரம் சொல்லி வணங்குதல் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்க வேண்டும்.
|