பிரசாதத்தை வீட்டுக்குக் கொண்டு வரலாமா?
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் சம்ஸ்க்ருத பண்டிதர் சண்முக சிவாச்சார்யர்
கடவுளின் திருநாமத்தை 108 தடவை உச்சரிப்பதும், ஜபம் செய்வதும் ஏன்? அது ஏன் வேறு எண்ணாக இருக்கக் கூடாது?
- கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4
சமய நூல்கள் - சமயத்தின் தத்துவங்கள் 3, 5, 7, 9 என, ஒடுக்கியும் விரித்தும் கூறுகின்றன. எனவே, அதில் உயர்ந்தது, பாக்கியம் தரும் மண்ணின் மைந்தனாகிய மங்களன் எனும் செவ்வாயின் எண் 9. சக்தியின் எண் 9. ஒலி, ஒளி பகுப்பு முறையும் ஒன்பதாகும். ஜபவிதி முறையும் அவ்வாறே உள்ளதால், ஜபமாலை இலக்கணம் அதற்கேற்பவே கூறப்பட்டுள்ளது.
ஒரு நட்சத்திரத்தை நான்கு பாதங்களாக ஆக்கினால், ஒரு ராசிக்கு 9 பாதங்கள். மொத்தம் 9ஜ்12 = 108 பாதங்கள். 108 தடவை முடியவில்லை-யெனில், கூட்டு எண் ஒன்பது வருவதாகச் செய்ய- லாம். அதாவது 18, 27, 36... என்று. பல விசேஷ அம்சங்கள் கொண்டதாக இவை இருப்பதி-னால்தான், நமது முன்னோர்கள் காலம் காலமாக இவற்றை அனுஷ்டானம் செய்து வந்துள்ளார்கள். நாமும் இவற்றை அனுதினமும் பயன்படுத்தி உயர்ந்த பலன்களை அடையலாமே!
சிவன் கோயில்களில் நமக்குத் தருகின்ற பிரசாதங்களை, வீட்டுக்குக் கொண்டு வரலாமா?
- பத்ம.சிவாஜி, தஞ்சாவூர்.
ஆலயத்தில், அர்ச்சகர்களின் கையால் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரசாதத்தை நாம் எடுத்து வரலாம். நாமாக எதையும் அங்கிருந்து எடுத்து வரக் கூடாது. சிவனுடைய நிர்மால்யம் - சண்டேசர் மற்றும் ஆசார்யருடைய பாகம் என ஆகமங்கள் கூறுகின்றன. ஒரு வங்கியில் நமது பணம் இருந்தால்கூட, கேஷியர் வழியாகவோ அல்லது தற்போது நாம் மிகவும் உபயோகப்படுத்தி வரும் அட்டைகள் மூலமாகவோதான் நமது பணத்தை எடுக்க முடியும். இவை இல்லாமல் நாமாகவே எடுத்தால், அது திருட்டாகக் கருதப்படுகிறது. ஸ்வாமியின் அருட்பிரசாதம் எதுவாக இருப்பினும் - அதை ஆத்மார்த்தமாகவும் மிகுந்த பக்தியுடனும் அந்தப் பிரசாதத்தை நாம் அணிவதன் மூலமோ, உட்கொள்வதன் மூலமோ நமக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படப் போகிறது என்ற நம்பிக்கையுடன் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிரசாதத்தை வீணாக்கக் கூடாது.
‘சிவன் சொத்து குல நாசம்’ என்பது, ஆலயத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானை மட்டும் குறிப்பது அல்ல. சிவம் எனில் நன்மை. நன்மை செய்பவர்கள் யாராக இருப்பினும், அவர்களின் பொருளை நாம் அனுபவிக்கக் கூடாது. அவர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களினால் நமது குடும்பத்தாருக்குப் பாதிப்பு வரும். ‘சுவாமிதானே... அவர் என்ன கேட்கப் போகிறார்’ என்ற அலட்சிய மனோபாவத்துடன் நாம் கடவுளை அணுகக் கூடாது. அவர் எல்லாம் அறிந்தவர். அனைத்துக் காலங்களிலும் நமது புண்ணிய பாவத்துக்கு ஏற்ப, பலன்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
நமக்கு அளிக்கப்படாத எதையும், எந்த ஆலயமாக இருந்தாலும் (பூ, இலையாக இருந்தாலும்) நாம் கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது. அதனால் நமது குடும்பத்துக்குப் பாதிப்புகள் வரலாம்.
அஷ்டமி, நவமி நாட்களில் நல்ல காரியங்களைத் தொடங்கக் கூடாது என்கிறார்களே! இது எதனால்? அன்றைய தினத்தில் பயணம் செய்யலாமா?
- கே.பரமசிவம், கீரனூர்
காலம் செய்வதை யாரும் செய்ய இயலாது. காலம், செயல்களுக்காகவே உள்ளது. சில காலம், சில பணிகளுக்கே உரியதாகிறது. மிக உயர்ந்தவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபடுவது நமது நெறி. அவ்வாறே, தெய்வங்களுக்கு மிக உகந்த திதிகளில் நமது சுப காரியங்களை நாம் தியாகம் செய்தல் நல்லது. சமய நூல்கள் விதித்தமையால், மாறாது பின்பற்றுதல் முறை. நூலின் கருத்தில் ஒரு பகுதியை ஏற்பது, ஒரு பகுதியை விட்டுவிடுவது மதித்தலாகாது. சாஸ்திர நிந்தை கூடாது.
எப்படி மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் அனைத்தையும், அதற்கு உரிய அளவுடனும், காலத்திலும் உட்கொண்டு நல்ல ஆரோக்கியத்தை நாம் பெறுகிறோமோ, அதுபோன்று நமது ரிஷிகள் கொடுத்திருக்கக்கூடிய ப்ரிஸ்க்ருப்-ஷனையும் ஒழுங்காகக் கடைபிடிப்போம்.
நோயுற்றிருக்கும் ஒருவர், கோயிலில் அர்ச்சனை செய்ய நினைக்கும்போது, சுவாமி பெயருக்குச் செய்ய வேண்டுமா அல்லது அவரது பெயருக்கே செய்து கொள்ளலாமா? இவற்றில் எது உகந்தது என சாஸ்திரம் கூறுகின்றது?
-நென்மேலி ஆர். நந்தகுமார், திருவண்ணாமலை.
ஆகமங்களில், தனி மனிதனுக்கு அர்ச்சனை என்பது பற்றி விளக்கப்படவில்லை. ஆலயங்களில் நடைபெறும் பூஜைகள் அனைத்தும், அனை-வருக்கும் பொதுவானதாகவே இருக்கும். இன்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்-கக்கூடிய ஆலயங்களில் தனியாக அர்ச்சனை செய்யும் பழக்கம் இல்லை. எனினும், இங்கு தமிழ்நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேல் நாத்திகவாதிகள் இந்து மதத்தையும் அதன் சடங்குகளையும் ஏளனம் செய்து, மக்களின் மனத்தில் அவ நம்பிக்கை எனும் விதையை விதைத்து, அது மிகப் பெரிய மரமாக வளர்ந்திருக்கிறது.
மக்கள் ஒழுக்க நெறியிலிருந்து தவறி, கடவுள் உள்ளார் என்பதையே மறந்து, செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகியதால் ஏற்பட்ட கர்ம பலன்களை அனுபவிக்க நேரும்போது, இப்போது மறுபடியும் ஆலயத்தை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி வரக்கூடிய மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும், முன்னர் ஆகமங்களில் கூறிய கால பூஜைமுறைகளை பல இடையூறுகளினால் செய்யமுடியாத காரணத்தினால் ஏற்படக்கூடிய மந்திர குறைபாடுகளை நிறைவு செய்வதற்காகவும், அர்ச்சனை செய்யும் வழிமுறையானது இப்போது நடைமுறையில் உள்ளது. எனவே, அர்ச்சனை செய்து கொள்பவர்களின் மன நிலைக்கு ஏற்ப விருப்பப்படி செய்து கொள்ளலாம்.
பிறந்த நாள், ராசி, நட்சத்திரம் என எதுவும் தெரியாதவர்களுக்கு ஜாதகம் கணிக்க முடியுமா?
- சி. விஜயாம்பாள், கிருஷ்ணகிரி-1.
ஆம்! கடவுளின் அருளினால் ரிஷிகளால் அருளப்பட்ட நாடிகளின் மூலமாக, நமது ஜாதகத்தை நாம் அறியலாம். இவையெல்லாம் சாத்தியமா எனக் கேட்பவர்களும் உண்டு. கடவுள் நினைத்தால் அவரால் முடியாதது என்று எதுவும் இல்லை. அவர் சர்வ சக்தி படைத்தவர். அனைத்துக் காலங்களையும் அறிந்தவர். பிற்காலத்தில், இதுபோன்று மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை உணர்ந்து அவர்கள் நல்வழிப்பட, பல வழிமுறைகளை நமக்கு அருளியுள்ளார்.
சிலவற்றை நேரடியாகவும், சிலவற்றை ரிஷிகளின் மூலமாகவும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் நாடி ஜோதிடம். அகத்தியர், பிருகு, காகபுஜண்டர் போன்று பல ரிஷிகளின் வார்த்தைகளை ஓலைச்சுவடியில் பதிந்து வைத்து, அதில் நமது வாழ்க்கையைப் பற்றியும் நமக்கு ஏற்பட்ட, ஏற்படக்கூடிய சம்பவங்கள், அதில் கடுமையான விளைவுகள் ஏதாவது ஏற்பட இருப்பின் அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளக்-கூடிய வழிமுறைகள் பற்றியும் விளக்கியுள்ளனர். இவற்றில், ஒரு மனிதனின் ஜாதகத்தைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளனர். ஆதலால், ஜாதகம் இல்லாதவர்கள் நல்ல நாடி ஜோதிடரின் ஆலோசனை பெற்று தங்களின் ஜாத-கத்தைப் பெறலாம்.
என் வயது 75. என் கணவர் மூன்று வருடங்களுக்கு முன் இறந்து போனார். பத்து நாட்களுக்கு முன் காலை நேரத்தில் ஒரு கனவு கண்டேன். கனவில் என் கணவர் குளித்து, தூய வெள்ளை ஆடையில் தலையைத் தோர்த்திக் கொண்டு நான் படுத்திருந்த அறையின் வெளியில் நின்றுகொண்டு, என் கையில் நான்கு பழமும் இரண்டு தேங்காயும் கொடுத்து, ‘நான் உன்னிடம் சொல்லி இருந்தேனே - நீ கூப்பிடும்போது வருவேன் என்று. எதற்குக் கவலைப்படுகிறாய்?’ என்று கூறினார். அன்று, நாள் முழுவதும் அவர் என் கூடவே வருவதுபோல் இருந்தது. அதற்குப் பின் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்தக் கனவைப் பற்றி என் மகளிடமும் சொல்ல முடியவில்லை. இதற்கு என்ன அர்த்தம்?
-ராஜம் ராமன், கொல்கத்தா-84.
இவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கனவுகள் சில நேரம் கவனிக்-கத்தக்கவை. பல நேரம் நாம் விட்டுவிட வேண்டி-யவை. தாங்கள் கூறியுள்ள கனவு தங்கள் கண-வரின்மீது தாங்கள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடே! இதை, தாங்கள் மறந்துவிடுவது நல்லது. மற்றவர்களிடம் கூறாமல் இருப்பதும் நல்லது.
மனிதன், தனியாக பூமிக்கு வந்தான். செல்லும்-போதும் தனியாகத்தான் போகிறான். இடைப்-பட்ட காலகட்டத்தில், நமது உறவினர்களாகவும் நண்பர்களாகவும் வரக்கூடிய அனைத்து உறவு-களும் தற்காலிகமானவையே! தாங்கள் தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தினால், இதுபோன்ற கனவுகள் வருவதைத் தவிர்க்கலாம். இறந்தவர்கள் திரும்பியும் வர மாட்டார்கள். அவரவர்கள், தங்களின் கர்மவினை-களுக்கு ஏற்ப வேறு பிறவிகளை எடுத்திருப்பார்கள். தாங்கள் தங்கள் கணவரின்மீது வைத்திருந்த அன்பின் வெளிப்பாடே அந்தக் கனவு என்பதைப் புரிந்துகொண்டு, தைரியமாக வாழ்க்கையைத் தொடருங்கள். கடவுள் உங்களுக்குத் துணை இருப்பார்.
சொல்லமுடியாத சில காரணங்களால், நான் என் சொந்த ஊரை விட்டு வெளியேறி, வேறு ஊரில் வசித்து வருகிறேன். ஊரைவிட்டு வரும்போது ஸ்வாமி படங்கள் - முக்கியமாக இரண்டு சாளக்கிராமங்களை (என் மாமியார் எனக்குக் கொடுத்தது) விட்டுவிட்டு வந்து-விட்டேன். இப்போது எட்டு வருடம் ஆகி-விட்டது. நான் சொல்ல முடியாத துன்பத்தில் உள்ளேன். என் மகன்களுக்கு நல்ல வேலை கிடைத்தும், வேலை செய்யும் இடத்தில் அதிக பிரச்னை. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், சாளக்கிராமத்தை பட்டினி போட்டதால்தான் உனக்குப் பிரச்னை என்கிறார். ஊருக்குச் சென்று சாளக்கிராமத்தை எடுக்க முடியாத நிலை (கடன் தொல்லையால் ஊரைவிட்டே வெளியேறிய நிலை). என் மகன்களுக்கு நல்ல வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
-பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வாசகர்
பிரச்னைகள் இதனால்தான் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ‘சாளக்ராமே விஷ்ணு’ என்ற வசனப்படி, சாளக்ராமம் எனப்படுவது சாட்சாத் விஷ்ணு பகவானாகவே பார்க்கப்பட வேண்டும். தாங்கள் தங்களுக்கு அளித்த தெய்வங்களை விட்டுவிட்டு வந்தது தவறுதான். எனினும், பழையதை எண்ணி வருந்தாமல் இப்-போது என்ன செய்யலாம் என யோசியுங்கள்.
கடவுளர்களின் படங்களையோ விக்கிரகங்-களையோ வெறும் பொருளாக நினைக்காமல், அவற்றினுள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து அறிந்து, ஆனந்தம் பெற வேண்டும். இப்போது பல விக்கிரகங்களையும், கடவுளர்களின் படங்களையும் வீட்டில் வைத்துக்கொண்டிருப்பது ஒரு ஃபேஷன் ஆகி வருகிறது. இது மிகத் தவறு.
நிறையவோ, குறைவாகவோ எவ்வளவு இருந்-தாலும் அவற்றை நல்ல முறையில் ஆராதித்தோ-மானால், அங்கு கடவுளர்களின் ஸாந்நித்தியம் நமக்கு அருளை அள்ளிக் கொடுக்கும். தாங்கள் தங்கள் குருவின் மூலமாக, நல்ல சாளக்கிராமத்தைத் தேர்ந்தெடுத்து பக்தியுடன் ஆராதித்து வாருங்கள். இதனால் முதற்கண் தங்களின் மனத்தில் பதிந்துள்ள பயம் விலகி, தைரியம் பிறக்கும். அதன்பின், தங்களின் அனைத்துக் கஷ்டங்களும் விலகி சுகத்தை அடைவீர்கள்.
|