|
ஆடி மாதம், முதல் நான்கு மாதங்கள் மழைக்காலம் ஆகும். அப்போது துறவிகள் முதலானோர் வெளியில் செல்லாமல் விரதமிருப்பர். இதற்கு சதுர்மாச விரதம் என்று பெயர். சதுர் என்றால் நான்கு. இந்த விரதம் துறவிகளுக்கும், தவம் இருப்பவர்களுக்கும் உரியது.
விருப்பமிருந்தால் இல்லத்தாரும் இந்த விரதத்தை மேற் கொள்ளலாம். ஆடிப்பவுர்ணமியன்று இந்த விரதம் தொடங்குகிறது. அன்றைய நாளில் ஆச்சார்யர்களை வழிபட வேண்டும். ஆடிப் பௌர்ணமியை வியாச பௌர்ணமி என்றும், குரு பௌர்ணமி என்றும் சிறப்பித்துக்கூறுகின்றனர்.
|