|
ஆடி மாதத்தில் தான் சதுர்மாஸ் விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களை தொடருவர். இந்த காலத்தில் தான் பல ஊர்வன வகையை சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும்.
அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாச பூஜையும் நடக்கும். இது ஆடி பவுர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.
மஹாராஷ்ட்ராவில் தத்தாத்ரேயருக்கும் சிறப்பு பூஜை உண்டு. தவிர ஸ்ரீமஹாவிஷ்ணு சயனக்கோலத்தில் இருந்து கொண்டு நம்மை காக்கிறார்
|