| ஆதியெனும் பராபரத்தின் கிருபைகாப்பு
அன்பான மனோன்மணியாள் பாதங்காப்பு
சோதியெனும் பஞ்சகர்த்தாள் பாதங்காப்பு
சொற்பெரியகரிமுகனுங் கந்தன்காப்பு
நீதியெனு மூலகுரு முதலாயுள்ள
நிகழ்சித்தர்போகருட பாதங்காப்பு
வாதியெனும் பெரியோர்கள் பதங்காப்பாக
வழுத்துகிறேன் ஜோசியத்தின் வன்மைகேளே |