| கிழக்கு மத்திய பகுதி:
வீட்டின் கிழக்கு திசையின் மத்திய பகுதியில் அமையும் இந்தபகுதி இந்திரனுக் குரிய பாகமாகக் கருதபடுகிறது. இது வீட்டுக் குழந்தைகளின் எதிர் காலம், அவர்களின் உயர்வு, வாழ்க்கை போன்ற வற்றைத் தீர்மானிக்கிறது. இந்த பகுதியை விட்டுக் குழந்தைகள் அதிகள் புழங்கும் அறையாக பயன்படுத்த வேண்டும். அவர்கள் படிக்கும், படுக்கும் அறையாக பயன்படுத்தலாம். இந்த பகுதி அறையின் கிழக்கு, வடக்கு சுவரில் ஜன்னல் அமைக்க வேண்டும். இந்த அறையின் வட கிழக்கு பகுதியில் எந்த பொருளைம் வைக்கக் கூடாது. இந்த அறையில் சூரிய ஒளி, காற்றோட்டம் இருக்குமாறுபார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டில் கிழக்கு மத்தியபகுதி அறை அந்த வீட்டின் இளையகுமாரர்களுக்கு ஏற்றதாகக் கருதபடுகிறது. |