|
நவக்கிரகங்களில் சூரியன், சனி இருவருக்கும் மட்டுமே தனிக் கோவில்கள் உள்ளன, இதில் சனி பகவானுக்குத் திருநள்ளாரில் கோவில் உள்ளது. சனி தோஷம், சனி தசை நடப்பவர்கள், அர்த்தமத்தில் சனி, ஏழரை சனி போன்ற சனி தரை உள்ளவர்கள் திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டால் சனி பகவான் அருளால் தோஷங்கள் நீங்கும்.
தொல்லைகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் திருநள்ளாறில் ஒரு மண்டலம் தங்கி விரதம் இருந்தால் பலன் கிடைக்கும். சனி ஒரு திசையிலிருந்து இடம் பெயரும் சனிப்பெயர்ச்சியின் போது திருநள்ளாரில் விசேஷ வழிபாடு நடைபெறும்.
சனிபெயர்ச்சியினால் ஏற்படும் தொல்லைகளினின்று நீங்க திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபடுவர்.
|