|
வடமேற்கு பகுதி :-
வீட்டில் வடக்கு-மேற்கு திசைகள் சந்திக்கும் வடமேற்கு பகுதியை வாயு பகவானுக்கு உரிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வடமேற்கு பகுதி அறையை பெண்கள் தங்கும் அறையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது பெண்களுக்குரிய அறையாகும். திருமணம் தடைபட்டு வரும் இளம் பெண்கள் இங்கு அதிக நேரம் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். விலைபோகாத பொருட்கள் மற்றும் சொத்துக்களின் தஸ்தாவேஜ்களை இந்த அறையில் வைத்திருக்கும்போது அதுகாற்று வேகத்தில் விரைவில் விற்பனையாகும் என்பது வாஸ்து ஐதீகம். வெளிநாடு செல்ல விருபமும்ளவர்கள் வடமேற்கு அறையில் தங்கினால் அவர்களின் கனவு விரைவில்நிறைவேறும். வடமேற்கு பகுதி அறையை விருந்தினர்களை உபசரிக்கும் அறையாகவும் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாகும். |