|
வாசற்படி
வாசற்படியை பொருத்தவரை படியின் அங்குலம் ஆறு அல்லது ஏழு அங்குலத்திற்கும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். படியின் அகலம் ஒன்பது அல்லது பத்து அங்குலத்திற்கும் இருக்க வேண்டும். வாசற்படியின் எணிக்கைக்கு ஒற்றைபடை, இரட்டை படை என எந்த நிபந்தனைம் விதிக்கபட வில்லை நம் விருபபடி எத்தனை படிகளை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். வடக்கு பார்த்த மற்றும் கிழக்கு பார்த்த வாசல்களுக்கு படி கட்டும் போது நீண்ட சதுர வடிவத்தில் கட்டுவது சிறபு. கண்டிபாக அரைவட்ட வடிவத்தில் கட்டக் கூடாது. தலைவாசலின் வாசற்காலுக்குக் கீழே மரத்தினால் ஆன படி அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும் போது அதற்கு கீழே நவரத்தினங்கள் , மந்திரத் தகடுகள்போன்றவற்றை புதைத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதானால் தீய சக்திகள் வீட்டிற்கும் நுழைவது தவிர்க்கபடும். நன்மைகள் விளையும் |