|
செல்வத்திற்கு அதிபதியான கடவுள் குபேரர் ஆவார். அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது.
அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து குபேர லட்சுமியை வழிபட்டால் கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
|