|
படுக்கை அறை
வீட்டில் ஒரே ஒரு படுக்கை அறை அமைக்கும் போது தென்மேற்கு அறையை படுக்கை அறையாக பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படுக்கை அறை அமைபதாகயிருந்தால் தெற்கு அல்லது மேற்கில் அவற்றை கூடுதலாக அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் வடகிழக்குத் திசையில் படுக்கை அறை அமைக்கக் கூடாது. அப்படியே அங்கு படுக்கை அறை அமைத்தாலும் அதில் குழந்தைகள்தான் படுக்க வேண்டும். இதோபோல் வீட்டின் வடக்கில் படுக்கை அறையை அமைத்தால் வருமானம் திருப்திகரமாக இருக்காது. வயதில் மூத்தவர்கள் தென் மேற்கில் அமையும் படுக்கை அறையிலும், இளையவர்கள் தெற்கிலும், மேற்கிலும் அமையும் படுக்கை அறையிலும் படுக்க வேண்டும். தென் கிழக்கில் அமையும் படுக்கை அறையை கன்னி பெண்கள், பெண் குழந்தைகள் போன்றவர்கள் பயன்படுத்தலாம். திருமணமானவர்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.
வடக்குத் திசையில் கண்டிபாகத் தலை வைத்து படுக்கக்கூடாது. தெற்கு, மேற்கு, கிழக்கு திசைகளில் தலை வைத்து படுபது நல்லது. உத்திரத்திற்கு நேர் கீழே படுக்கக் கூடாது. ஏரி, குளம், கடல், ஆறு போன்ற நீர் நிலைகளை நோக்கி படுக்கை அறை அமைக்கக் கூடாது. மேல் மாடியில் படுக்கை அறை அமைக்கும் போது அதற்கு நேர் கீழே சமையல் அறை இருக்கக் கூடாது. உயர் பதவிகளை வகிபவர்கள் மேற்கே தலை வைத்தும் விஞ்ஞானிகள் மற்றும் கலைத்துறை, எழுத்துத் துறையைச்சேர்ந்தவர்கள் கிழக்கில் தலை வைத்து படுக்க வேண்டும். |