|
சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமையன்று இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். வீரபத்திரர் திருவுருவை கலசத்தில் தூபித்து அபிஷேகம், பூஜை, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அன்று உபவாசம் செய்ய வேண்டும்.
மறுநாள் தினசரிக் கடமைகளை முடித்து கலசத்தில் தூபித்த திருவுருவை அந்தணருக்கு அளித்துத் தானம் கொடுத்து பாரனை செய்தல் வேண்டும். இவ்விரதம் இருப்பவர்கள் திருவடிகளை அடைவர்.
|