வீட்டுமனைகளும், திசைகளும் |
வீட்டுமனைகளும், திசைகளும்
வீட்டு மனைகளுக்கும், அது அமைந்திருக்கும் திசைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
வீடு கட்டுகிறவர்கள் தாங்கள் எந்த தொழிலில் அல்லது துறைகளில் ஈடுபட்டுள்ளார்களோ அதற்கு ஏற்ற முறையில், பொருத்தமான திசைகளில் அமைந்துள்ள வீட்டுமனைகளை தேர்ந்தெடுப்பது முக்கியம்.
புதிதாக நாம் வீடு கட்டுகிறோம் என்றால், மனை அமைந்திருக்கும் திசையைதான் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். மனை அமைந்திருக்கும் திசை என்பது, ஊரின் எந்த திசையில் அந்த மனை அமைந்துள்ளது என்பதை குறிப்பிடுவதுதான்.
வீட்டுமனை ஊரின் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி அமைந்திருந்தால், கல்வி, கலைத்துறையை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் வீடு கட்டினால் சிறப்பாக இருக்கும்.
வீட்டுமனை கிழக்கு நோக்கி நீண்டும், மேற்கு திசை பக்கமாக ஒதுங்கியும் அமைந்திருந்தால், அரசு துறையில் பதவி வகிப்பவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகட்ட ஏற்றது.
வணிகர்கள், தொழிலதிபர்கள் வீடு கட்டுவதாக இருந்தால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் மனை, ஊரின் வடக்குத் திசையில் அமைய வேண்டும். தெற்கு நோக்கி நீண்டிருந்தால் கூடுதல் சிறப்பு. |