|
வடகிழக்கு பகுதி:-
வீட்டில் உள்ள எட்டுத் திசைகளில் வடக்கு-கிழக்கு திசைகள் சந்திக்கும் வடகிழக்குத் திசையே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈசன் வசிக்கும் பகுதியாகும். எனவே இது ஈசான்ய மூலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வடகிழக்கு பகுதியில் அமையும் அறையை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான பகுதி வடகிழக்கு பகுதியாகும். முடிந்தவரை இந்த அறையில் பாரங்களை ஏற்றக்கூடாது. இந்த அறையில் நல்ல காற்றோட்டம் இருக்கிற மாதிரியும், நன்றாக சூரிய ஒளி வருகிற மாதிரியும் பார்த்துக் கொண்டால் வீட்டில் செல்வம் வளம் அதிகரிக்கும் சகல ஐஸ்வர்யங்களும் நம்மை வந்து அடையும். மற்ற பகுதியில் உள்ள தரைத்தளங்களைவிட இந்த வட-கிழக்கு அறையின் தரைத்தளம் சற்று பள்ளமாகவே இருக்க வேண்டும். வடகிழக்கு அறையில் கண்டிபாக சமையல் அறை அமைக்கக்கூடாது. இதனால் தீய பலன்கள் விளைம். தினமும் ஐந்து முறை இந்த அறையை நல்ல தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதனால் எடுத்த காரியத்தில் வெற்றிகிடைக்கும். வடகிழக்கு அறையில் தெற்கு, தென் கிழக்கு பகுதியில் நுழைவு வாயில்
அமைத்துக்கொள்ள வேண்டும். இளம் வயதினர் இந்த அறையில் தூங்கும் போது அவர்கள் நல்ல சுறுசுறுபானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருபர். நோய்வாய்பட்டவர்கள் இந்த அறையில் தூங்கி எழுந்தால் விரைவில் அந்நோய் நீங்கும். சுப காரியங்கள், புதிய முயற்சிகள், வேலைக்கு விண்ணப்பித்தல், பரிட்சைக்கு படித்தல் போன்றவற்றை இந்த அறையில் வைத்து செய்யும்போது அதில் நல்ல வெற்றி உண்டாகும். |