|
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று இவ்விரதம் அனுசரிக்கப்படும். கணவனை இழந்த பெண்களும், தந்தையை இழந்த ஆடவர்களும், கடைபிடிக்கப்படும் விரதமாகும்.
அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து, அவரவர் வழக்கப்படி வழிபாடு செய்து பகலில் காகத்திற்கு உணவு வைத்து பிறகு அவர்கள் உண்ண வேண்டும். இரவில் விரதம் இருக்க வேண்டும் அல்லது பால், பழம் உண்ணலாம்.
இவ்விரதம் மேற்கொள்வதால், இறந்தவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
|