|
பஞ்சபட்ஷி
"உன்னை யொழிய ஒருவரையும்
நம்புகிலேன் பின்னை யொருவருவரை
யான் பின்செல்வேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை
தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வால்வே . "
பஞ்ச பட்சிகள் குறித்து ஓர் விளக்கம்
"பஞ்ச பட்சிகள்" என்றால் ஐந்து பட்சிகள் எனப் பொருள்படும். அவை வல்லூறு, ஆந்தை, காகம்,கோழி.மயில் என்பனவாகும்.
"வல்லூறு" என்பது வானில் பறக்கும் ஓர் இன்ப்பறவையாகும்.இதன் இன்மான கருடன் திருமால் வாகனமாகும்.
"ஆந்தை" என்ற பறவையை வடநாட்டில் திருமால் இருப்பிட்மாக மதித்துப் போற்றி வருகின்றர்.
"காகம்" என்பது சனீஸவரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி வணங்குகின்றனர்.
"கோழி" என்பது முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும்."செவப் கொடியோன்" எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை போற்றி வணங்குகின்றனர்.
"மயில்" என்பது முருகப் பெருமானின் வாகனமாகும்.
மேற்கூறிய ஜந்து வகையான பறவைகளைக் கொண்டு நமது முன்னோர்கள் இந்தப பஞ்ச பட்சி சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குற்ப்பிடத்தக்கது. ஒவொருவரின் பிறந்த நட்சத்திரப்படி ஒவ்வொரு நாளிலும் அவருக்கு உகந்த நேரத்தை அறிவதற்கான கணிதம் இது! அரசு ஊண் நேரம் நடக்கும் பொழுதில் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்! மற்ற நேரம் பகுதிகளை விலக்கிட வேண்டும். ஏழு நாட்களிலும் பகல் நேர ஐந்து பகுதிகள்,இரவு நேர பகுதிகளை அட்டவணையாக தயாரித்து வைத்துக் கொண்டு மிகுந்த பயன் பெறலாம்! அதாவது ஜோதிடம் ,கைரகை, அகஸ்தியர் ஆருடம்,சகாதேவர் ஆருடம்,பிரசன்னம்,பல்லி சாஸ்திரம்,அங்க சாஸ்திரம்,தேங்காய் ஜோதிடம்,சீதை,ராமர் சக்கரம்,வெற்றிலை பாக்கு ஜோதிடம்,வாக்கு கேட்டல் போன்ற பலவிதமான சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவக தந்து சென்றுள்ளனர்! மேற்கூறிய சாஸ்திரங்களில் மிகவும் சிறந்தது ஜோதிடக் கலையாகும். அடுத்து,கை ரேகை சாஸ்திரம் ஆகும். மற்றதெல்லாம் ஆருட சாஸ்திரம் போல் கூறப்பட்டுள்ளது! மேற்கூறிய சாஸ்திரங்கள் போக,பஞ்ச சாஸ்திரம் என்றொரு கனிதத்தையும் நன்றாக ஆராய்ச்சி செய்து நமக்குத் தந்து சென்றுள்ளனர். இதை "புள்ளியல் சாஸ்திரம்" என்றும் கூருவது உண்டு.வல்லூறு, ஆந்தை, , காகம் ,கோழி ,மயில் 5 பட்சிகள் ஒவ்வொரு நாளும் தங்களது தொழிலை ஒழுங்காக செய்து வருகின்றன.ஒரு மனிதன் பிறந்த நட்சத்திரத்தை வைத்து,அவனுடைய பட்சி என்ன என்று தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு மனிதனது பட்சி அரசு ,ஊண் தொழிலை செய்து கொண்டிருக்கும் காலத்தில் அவன் எடுக்கும் முயற்சில் யாவும் வெற்றியில் முடியும். துயில், சாவு தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சிகள் தோல்வியில் முடியும். "நடை" தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சி இழுபறியாக இருக்கும் என அறிய வேண்டும். பொதுவக, "பஞ்ச பட்சி சாஸ்ததிரம் " நல்ல காரியம் ஆரம்பிக்கும், வீடு கட்டுவதற்கும்,கிரகபிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கும்போது பேருதவியாக இருக்கும் எனலாம். ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது போலவே, இந்த சாஸ்திரத்திற்கும் திச-புத்தி-அந்திர காலங்கள் குறிக்கப்பட்டுள்ளன.ஆனால் ஜாதகப்பலன் அளவிற்கு இந்து சாஸ்திரம் வேலை செய்யாது என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.அதாவது,ஒருவருக்கும திசா புத்திகள் நல்லபடியாக அமைந்து, பட்சி சாஸ்திரம் திசா-புத்தி சாவு-துயிலாக இருந்தால்,அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது! அதே சமயம் பட்சி சாஸ்திர - புத்திகள் அரஇ ஊணாக இருந்தால், அவரது வாழ்வில் மிகவும் சிறப்பான நல்ல பலங்கள் நடைபெறும் என்பது எமது ஆய்வில் உண்மையாகும். அகஸ்தியர், உரோம ரிஷி,கும்பமுனி,காகபுசுண்டர்,போகர் போன்ற பல ரிஷிகள் "பஞ்ச பட்சி சாஸ்திரத்தை" தங்களது சுவடி வாயிலாக வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகிகது! மேலும், "திருடு போன பொருள் கிடைக்குமா? காணாமல் போன மாடு திரும்பி வருமா? காணா போன பையன் திரும்பி வருவானா?" போன்ற ஆருடம் சம்பந்தமான கேள்விகளுக்கும் இந்த சாஸ்திரம் பெரிதும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரத்திற்குரிய பட்சிகள்:
அசுவனி, பரனி, கிருத்திகை,ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய ஐந்து ந்ட்சத்திரத்திற்கும் பட்சி வல்லூறு, திருவாதிரை, புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம் ஆகிய ஆறு ந்ட்சத்திரத்திற்கும் பட்சி ஆந்தை ,உத்திராடம் ,அஸ்தம், சித்திரை,சிவாதி, விசாகம் ஆகிய ஐந்து நட்சத்திரத்திற்கும் பட்சி காகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரத்திற்கும் பட்சிகோழி, திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய ஆறு நட்சத்திரத்திற்கும் பட்சி மயில். இதை ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்கள் பெய்ரின் முதல் எழுத்துப்படி அறிய வேண்டும்.
.
வளர்பிறை பட்சி
நட்சத்திரம்
தேய்பிறை பட்சி
வல்லுறு
அக்வனி, பரணி, கிருத்தி, ரோஹி, மிருகசிரிஷ்
மயில்
ஆந்தை
திருவாதி, புளர்பூச, பூசம், ஆயில்ய, மகம், பூரம்
கோழி
காகம்
உத்திரம், அஸதம்,சித்திரை,சுவாதி, விசாகம்
காகம்
கோழி
அனுஷம்,கேட்டை,மூலம்,பூராட்ம்,உத்ராடம்
ஆந்தை
மயில்
திருஓண, அவிட்ட, சதயம்,பூரட், உத்திரட், ரேவ.,
வல்லுறு
ஒவ்வொரு கிழமையிலும் படுபட்சிகள் வெவ்வேறாக இருக்கும்.அத்துடன் வளர்பிறைக்கும் தேற்பிறைக்கும் கூட த்தியாசமாக இருக்கும்.அவை வருமாறு : நட்சத்திரத்திற்குரிய படுபட்சியுள்ள நாள்களில் பிரயாணம் செல்வது சுப காரியங்கள் செய்வது போன்றவைற்றை விலகுவது நல்லது.
|