Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 Pay online Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 8870974887 WhatsApp : 8870974887 Email id : vs2008w7@gmail.com
விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதுதான்
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)
2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).
3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்
4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்
8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்
13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்
14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.
15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!
18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்
19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்
20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும
25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது - ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக் கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நோரிடும்
37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.
39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.
43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8 ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல
நமது இணையதளத்தில் பயன் உள்ள பகுதிகளுக்கு இணைப்பு பார்க்க-Click Here
ஜனனஜாதக பிரின்ட் சாப்ட்வேர் பார்க்க
திருமணப்பொருத்தம் பிரின்ட் சாப்ட்வேர் பார்க்க
ஜாமக்கோள் சாப்ட்வேர் பார்க்க
ஹிப்ரு எண் கணிதம் சாப்ட்வேர் பார்க்க
பெயர் உச்சரிப்பு எண் கணிதம் சாப்ட்வேர் பார்க்க
ஜோதிட அகராதி சாப்ட்வேர் பார்க்க
ஜாமக்கோள் சூட்சமங்கள் பார்க்க
உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் எப்படி உள்ளது பார்க்க
ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில்..
எட்டாம் அதிபதி உங்கள் ஜாதகத்தில் எப்படி..
திருமணப்பொருத்தம் ஒரு வினாடியில் பார்க்க
இந்த நொடியில் ஜாமகிரகங்கள் உங்கள் வாழ்க்கையில் எங்கே என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் பார்க்க
தடை-தாமதத் திருமணம்..
திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் எப்படி..



ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 4/27/2024 5:42:48 AM