ஜாமக்கோள் ஆருடம் பிரசன்னம் இன்டர்நெட் உலகில் முதல் முறையாக ஆன்லைனில்
கே பி, திருமணப பொருத்தம், ஹீப்ரு எண்கணிதம் ,மருத்துவ ஜோதிடம்.....
ஒன்பதாம் வீடு. இவை அனைத்தும் ஜோதிட பொது வீதிகள் உங்கள் ஜாதகத்தில் எத்தனை வீதிகள் பொருந்துகிறது என்று பாருங்கள்.
1. ஒன்பதம் வீடு தந்தை. மத ஆச்சாரம். குல வழக்கம். குரு. உடனே பலம் தரும் தெய்வம். மதப்பற்று. மறுஉலக தொடர்பு. பெரியவர்கள். தூரத்து செய்திகள். திருமண மண்டபம். கலாச்சார விருப்பம். நீண்ட தூரப் பயணம். தொழில் விரயம். தெய்வ வழிப்பாட்டு இடம். தம்பியின் மனைவி. ஒன்றினை தியாகம் செய்தல். பணம் புரட்டுதல். ஜபம். உயர் கல்வி. வெளிநாட்டுப் பயணம்,தந்தை, தந்தை வழி உறவுகள், பூர்வீகச்சொத்துக்கள், தான, தர்ம குணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள், முயற்சி இன்றிக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள். 9ஆம் வீடு: இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும்.
2. ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகன் பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பான். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான்.
3. ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பான்.
4. ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகன் நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும் இருப்பான்.
5. இங்கே சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் அல்லது தீயவர்களின் கூட்டோடு அமர்ந்திருந்தால், ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான். தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும் மதிக்க மாட்டான். இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.
6. ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும் அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்) அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாகஇருக்கும்.
7. லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது (The lagna lord and ninth lord exchanging their houses), ஜாதகன் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். The native of the horoscope will be very lucky in all respects.
8. ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும். ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். 10ற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம அதிபதிகள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது The ninth lord and tenth lord exchanging their houses) அந்த யோகத்திற்குப் பெயர் தர்மகர்மாதிபதி யோகம். அந்த யோகம் பெற்றவன் அதீதமான பொருள் ஈட்டுவான். ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வான்.
9. ஒன்பதாம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.
10. ஒன்பதாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால், ஜாதகன் துரதிர்ஷ்டமானவன்.
உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மற்றும் ஒன்பதாம் அதிபதி பிறப்பில் எந்தநிலையில் உள்ளார் இப்பொழுது கோச்சாரத்தில் எந்தநிலையில் உள்ளார் என்று பார்க்க பிறப்பு விபரங்களை கொடுக்கவும்
11. 11ஆம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
12. அதேபோல ஒன்பதாம் வீட்டுக்காரன் 2ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
13. ஒன்பதில் சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதிர்ஷ்டமானவன். வளமாக வாழக்கூடியவன். நிறையக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர் களை உடையவன். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு உடையவன். கொள்கைப்படி நடப்பவன். பெருந்தன்மை உடையவன்.
14. இங்கே அமரும் சந்திரன் நல்ல பார்வை பெற்று அமர்ந்தால், ஜாதகன் பல தர்மச் செயல்களைச் செய்வான். பலவிதமான சொத்துக்களை வாங்கிக்குவிப்பான். பல நாடுகளுக்கும் சென்று வருவான்.
15. ஒன்பதில் சந்திரனுடன் சனியும் சேர்ந்தமர்ந்தால் அல்லது இங்கே அமரும் சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் பலவிதமானதுன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
16. ஒன்பதில் சந்திரன் இருந்து, அந்தச் சந்திரனை, சனி, செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் பார்த்தால் (தங்களது பார்வையால்) ஜாதகன் ஒரு அரசனைப் போல வாழ்வான். (He will be a ruler)
17. சந்திரனுடன், செவ்வாய் சேர்ந்து ஒன்பதில் இருந்தால், ஜாதகனின் தாய்க்கு விபத்து போன்ற துன்பங்கள் நேரிடலாம்.
18. இங்கே இருக்கும் சந்திரன் சுக்கிரனின் சேர்க்கை பெற்றால், ஜாதகன் நெறிமுறைகள் இல்லாதவனாக இருப்பான். பல பெண்களோடு தொடர்பு கொண்டு வாழ்வான். ஜாதகிக்கும் இதே பலன்கள்தான்.
19. Second lord in the 11th, 11th lord in the ninth and ninth lord in the second (exchanges), the native will be very lucky. ஆதீதமான பொருள் சேரும்.
20. 3ஆம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில் இருந்தால் அல்லது வலுவாக இருந்தால், ஜாதகன் தன் சகோதரர்கள் மூலமாக பல உதவிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பான்.
21. 5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன் தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக வாழ்வான்.
22. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல் ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும்.
23. லக்கினத்திற்கு ஏழில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய தந்தை மூலமாக செல்வங்கள் கிடைக்கும்.
24. ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலைமை யில் இருந்தால், ஜாதகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவன்.
25. ஜாதகத்தில் சூரியன், சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது மாந்தியால் கெட்டிருந்தால், ஜாதகனால் அவனுடைய தந்தைக்குத் துன்பங்கள்தான் ஏற்படும்.
26. சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத் திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகன், அவனுடைய பெற்றோர் களால் புறக்கணிக்கப்படுவான்.
27. ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சென்றமர்ந்தால், ஜாதகன் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.வேலையில் அல்லது தொழிலில் அல்லது ஆட்சியில் அல்லது அரசில் எப்படி வேண்டுமென்றாலும் அந்த அதிகாரம் அமையும். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தைவைத்து மாறுபடும். ஆனால் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.
28. ஒன்பதாம் இடத்தில் அமரும் செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது பெண்கள் தொடர்பு உண்டாகும். ஜாதகனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும்.
29. ஒன்பதில் செவ்வாயும், சனியும் கூட்டாக அமர்ந்தால் ஜாதகன் போதைக்கு அடிமையாவான். போதை என்பது பல விதமான போதைகளில் ஒன்றைக் குறிக்கும் (addiction to women or some other things). பிடிவாதக்காரனாகவும், முரண்பாடுகள் உடையவனாகவும் இருப்பான்.
30. ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால், கல்வியாளனாக ஜாதகன் இருப்பான் (scholar).
31. ஒன்பதில், புதனுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் விஞ்ஞானியாக அல்லது பெரிய இசை மேதையாக இருப்பான். கெட்டிக்காரனாக இருப்பான். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தை வைத்து மாறுபடும். ஆனால் மேதையாக இருப்பான்.
32. ஒன்பதில், புதனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகன் சிறந்த அறிவாளியாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பான். தந்தையுடன் நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான். பல அமைப்புக்களில் சிறப்பாக உரை யாற்றுபவனாக இருப்பான். வெளி நாடுகளில் உள்ள கழகங்களின் அழைப்பின் பேரில் சென்று உரையாற்றுபவனாக இருப்பான்.
33. ஒன்பதில் சனி இருந்தால், ஜாதகன் தனித்து வாழும்படி ஆகிவிடும். சிலருக்குத் திருமண வாழ்க்கை இல்லாதுபோய்விடும். இந்த அமைப்புள்ள ஜாதகன் ராணுவத்தில் இருந்தால் பெரிய வீரனாகச் சிறப்படைவான்.
34. ஒன்பதில், சனியுடன் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தை மற்றும் தன் குழந்தைகளுடன் நேசம் இருக்காது.
35. ஒன்பதில், சனியுடன் புதன் சேர்ந்திருந்து, நல்ல பார்வை எதுவும் இல்லை யென்றால், ஜாதகன் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கமாட்டான். பலரையும் ஏமாற்றிப் பிழைப்பான். அவன் செல்வந்தனாக இருந்தாலும், இப்படிப்பட்ட குணமுடையவனாகத்தான் இருப்பான்.
36. ஒன்பதில் குரு இருந்தால், ஜாதகன் சட்டத்துறையில் அல்லது தத்துவத்தில் நிபுணனாக இருப்பான். இங்கே அமரும் குரு நல்ல பார்வை பெற்றால், அபரிதமான பொருள் ஈட்டுவான். சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் மேல் நேசமுடைய வனாக இருப்பான்.
37. ஒன்பதில் இருக்கும் குரு, சந்திரன் மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் ராணுவம் அல்லது காவல்துறையில் பெரிய அதிகாரியாக விளங்குவான்.
38. ஒன்பதில் குருவுடன் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகன் நடத்தை சரியில்லாதவனாக ஆகிவிடுவான்.
39. ஒன்பதில் சுக்கிரன் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். கல்வி, வேலை, மனைவி, குழந்தைகள் என்று எல்லாமே அவனுக்குச் சிறப்பாகக் கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழ்வான்.
40. ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப் பேசக்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான்.
உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மற்றும் ஒன்பதாம் அதிபதி பிறப்பில் எந்தநிலையில் உள்ளார் இப்பொழுது கோச்சாரத்தில் எந்தநிலையில் உள்ளார் என்று பார்க்க பிறப்பு விபரங்களை கொடுக்கவும்
41. ஒன்பதில் சுக்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் பஞ்சாயத்து, சமரசப் பேச்சுக்கள்,தூதுவராகச் செயல்படுவது ஆகியவற்றில் சிறந்து விளங்குவான். ஒரு அரசனின் கீழோ அல்லது ஒரு நாட்டு அரசிற்கோ தூதுவனாகச் செயல்படுவான். மனிதர்களைப் பற்றியும் உலக நடைமுறை விஷயங்களைப் பற்றிய அவனுடைய கருத்துக்களும், கண்ணோட்டங்களும் சிறப்பாக இருக்கும்.
42. ஒன்பதில் சுக்கிரனுடன் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் ஜாதகன் notorius criminal ஆக இருப்பான். அல்லது அதுபோன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு உடையவனாக இருப்பான்.
43. ஒன்பதில் ராகு இருப்பது பலவிதங்களில் நல்லதல்ல. அந்த ராகு வேறு நல்ல கிரகங்களின் பார்வை பெறவில்லை என்றால், ஜாதகன் கடுகடுப்பான ஆசாமியாக இருப்பான். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.
44. ஒன்பதில் ராகு இருந்து ஜாதகனின் ஏழாம் வீடும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு மிகவும் அவலட்சணமான மனைவி வந்து சேர்வாள். அவனுடைய மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.
45. ஒன்பதில் ராகு இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் கிடைத்தாலும், மிகுந்த வம்பு, வழக்கு, போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும்.
46. ஒன்பதில் கேது இருந்தால், ஜாதகன் உணர்ச்சி வசப்படுபவன் (short tempered). மனநிலை பிரள்பவன்.
47. ஒன்பதாம் இடத்துக் கேது, ஜாதகனுக்கு அவனுடைய பெற்றோர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தாது.
48. ஒன்பதாம் இடம், தந்தை, தந்தைவழி உறவினர்கள், பூர்வீகச் சொத்துக்கள், வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை, முயற்சி இன்றிக் கிடைக்கும் பலன்கள் (பாக்கியம்) ஆகியவை சம்பந்தப்பட்டது.
49. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப் பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு வாழ்வாள்.
50. இந்த வீடு சரிவர அமையாத மங்கை நல்லாள் வாழ்க்கையில் பலவித இன்னல்களுக்கு ஆளாவாள்.
51. இந்த ஒன்பதாம் வீட்டிற்குரிய பலன்கள், அதன் அதிபதி, மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்களில் கிடைக்கும் அல்லது உண்டாகும் அல்லது நடைபெறும்.
52. ஒன்பதாம் அதிபதி ஒன்றாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் நட்பு வீடாக இருந்து நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை கிடைத்தால்: நல்ல தந்தை அமைந்திருப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் தான தருமங்கள் செய்வான். சாஸ்திரங்கள், புராணங்களில் ஈடுபாடு இருக்கும். சமூகத்தில் பெரிய பதவி அல்லது அந்தஸ்து கிடைக்கும்! தெய்வபக்தி உள்ளவனாக இருப்பான். இறைவனின் அருள் முழுமையாக இருக்கும் தன் தந்தை, பெரியவர்கள், குரு ஆகியோரின் மேல் விசுவாசமுள்ளவனாக இருப்பான். கடந்து வந்த பாதையை ஒரு நாளும் மறக்க மாட்டான். மொத்தத்தில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருப்பான். உதாரண மனிதனாக இருப்பான். பெண்ணாக இருந்தால் உதாரண மனுஷியாக இருப்பாள். தங்கள் வேலைகளைத் தாங்களே முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். ஒன்பதாம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் இணைந்து, லக்கினத்திலோ அல்லது வேறு நல்ல இடங்களிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால்மேலே சொன்னவற்றிற்கு எதிரான பலன்கள் நடைபெறும் அல்லது கிடைக்கும்.
53. ஒன்பதாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பார். தந்தையின் சொத்துக்கள் அப்படியே ஜாதகனுக்குக் கிடைக்கும். அவனும் தன் தந்தையைப்போலவே வசதிகள் உடையவனாகவும் சமுதாயத்தில் செல்வாக்கு உடையவனாகவும் இருப்பான். அவர்கள் குடும்பம் உயர்வான நிலமையில் இருக்கும். நன்றாக இல்லாவிட்டால் பூர்வீகச் சொத்துக்களை இழக்க நேரிடும். அல்லது அழிக்க நேரிடும். அவனுடைய குடும்பம் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
54. ஒன்பதாம் அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் நன்றாக எழுதக்கூடியவன். நன்றாக மேடைகளில் பேசக்கூடியவன். எழுத்தால் பெரும் பொருளை ஈட்டக்கூடியவன். பேசப்படுபவானக உயர்வான். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. அவனே நிறைய சம்பாதிப்பான். சகோதரன், சகோதரிகளின் அன்பும், ஆதரவும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால் ஜாதகத்தில் கிரகங்கள் எந்த அளவிற்குக் கெட்டிருக்கிறதோ அந்த அளவிற்குச் சிக்கல்கள் ஏற்படும். வம்பு, வழக்கு, நீதிமன்ற விசாரணைகள் என்று அலைந்து சொத்துக்களை விற்றுக் கடைசியில் ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவான்.
55. ஒன்பதாம் அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால் நன்றாக பெற்றோர்களின் முழு அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். நிலம், வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள் என்று அரச வாழ்க்கை வாழ்வான். உறவினர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும் நிலம், பூமி ஆகியவை பிறப்பில் இல்லாவிட்டாலும், ஜாதகன் தன் முயற்சியால் அதாவது ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து, அவற்றை ஈட்டுவான் அல்லது தேடிப் பிடித்துவிடுவான். மகிழ்ச்சியாக இருப்பான். வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்காது. பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும். இறுகிய மனம் படைத்த அல்லது அன்பில்லாத தந்தையால் சிறு வயதில் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பான். அல்லது கருத்து வேற்றுமை மிக்க பெற்றோர்களால் சிறு வயது வாழ்க்கை அவலமாக இருந்திருக்கும். ஒன்பதாம் வீட்டுக்காரன், நான்காம் அதிபதி ஆகியோருடன் ராகுவும் வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், அல்லது அவர்கள் இருவரும் ராகுவின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனின் தாய் கணவனைப் பிரிந்து வாழ்பவளாக இருப்பாள் அல்லது விவாகரத்து பெற்றவளாக இருப்பாள்.
56. ஒன்பதாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால் நன்றாக ஜாதகனின் குழந்தைகள் அம்சமாக இருப்பார்கள். திறமைசாலிகளாகவும், நுண்ணறிவுடையவர்களாகவும் இருந்து ஜாதகனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுப்பார்கள். ஜாதகன் அரசுப் பணிகளில் இருந்தால், பல உயர்வுகளைப் பெற்றுப் பிரபலமாக வலம் வருவான். எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். குடும்பம் சிறந்து விளங்கும். ஜாதகனின் தந்தையும் புகழ் பெற்றவராக, செல்வாக்கு உடையவராக இருப்பார். மொத்தத்தில் ஜாதகன் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய வாழ்க்கை வாழ்வான்.
57. ஒன்பதாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகன் போராடி, வழக்குத் தொடுத்துதான் தன் தந்தையாரின் சொத்துக்களை அடையமுடியும். நன்றாக இல்லாவிட்டால் தந்தாயின் சொத்துக்களை அடையமுடியாது. அல்லது கிடைக்காது. மேற்கொண்டு தந்தையார் நிலுவையில் வைத்துவிட்டுப்போன கடன்களைத் தன் கைக்காசைக் கொண்டு தீர்க்க வேண்டியதாயிருக்கும். பொதுவாக இந்த இடம் ஒன்பதாம் வீட்டு அதிபதி அமர்வதற்கு ஏற்ற இடமல்ல! எது எப்படி இருந்தாலும் பொது அமைப்பில் ஜாதகனுடைய தந்தை நோய்களை உடையவாரகவும், பிரச்சினைகளை உடையவராகவும் இருப்பார். அப்படியே சொத்துக்கள் கிடைத்தாலும், பல வழிகளிலும் அவற்றை இழக்க நேரிடும். ஜாதகனுக்கு வயதான காலத்தில் உடல் உபாதைகள் ஏற்படும்!
58. ஒன்பதாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் அடக்கம், அமைதி, அழகு என்று எல்லாம் அமைந்த மனைவி ஜாதகனுக்குக் கிடைப்பாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தந்தையின் சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும் ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சி உள்ளதாக இருக்கும். ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டுவான். சிலர் அங்கேயேவாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் ஜாதகனுக்கு வெளி நாட்டு வேலையும், அங்கேயே தங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் மனதில் மகிழ்ச்சி இருக்காது.
59. ஒன்பதாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகன் தன் தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருப்பான். தந்தையின் சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும். நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் வறுமையில் உழல்வான். அன்றாடம் காய்ச்சியாக வாழ நேரிடும். வாழ்க்கையின் நடைமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிடுவான். தன் முன்னோர்கள் சேர்த்துவைத்திருந்த நாணயம், நம்பிக்கை, நல்ல பெயர்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிடுவான். தந்தையின் உடல் நிலை கெட்டிருக்கும். இவனுக்கும் புத்திர தோஷம் உண்டாகும்.
60. ஒன்பதாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஒன்பதாம் வீட்டு அதிபதி தன் சொந்த வீட்டில் அதாவது ஒன்பதிலேயே, ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகனின் தந்தை தீர்க்க ஆயுள் உடையவராக இருப்பார். தான, தர்மங்கள் நிறைந்த குடும்பம் அமையும். தந்தையின் சொத்துக்கள் தானாக வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று உன்னத நிலையில் வாழ்வான். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பான். அடிக்கடி வெளி நாடுகளுக்குச் செல்வான். பெரும்பொருள் ஈட்டுவான். பலர் அங்கேயே சென்று தங்கி விடுவார்கள். பெரும் பொருள் ஈட்டி உன்னத நிலையில் வாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் ஒன்பதாம் அதிபதி கெட்டிருந்தால் அல்லது 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகன் தன்னுடைய சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.
61. ஒன்பதாம் அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகன் பெரும் புகழையும், வலிமைகளையும் பெற்றுத் திகழ்வான். அதீதமான பொருள் ஈட்டுவான். வசதியான ராஜ வாழ்க்கை வாழ்வான். தர்ம சிந்தனைகளையுடைய வாழ்க்கை அமையும்.சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாகத் திகழ்வான். செல்வாக்கு உள்ள குடும்பமாக இருக்கும். ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து நல்ல கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அரசில் உயர் பதவிகள் கிடைக்கும். சிலர் அமைச்சராகக்கூட ஆவதுண்டு! தந்தையின் சொத்துக்கள் விருத்தியடையும். தான தர்மம், தெய்வ வழிபாடு மிகுந்தவர்களாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள், பெரிய மனிதர்களின் தொடர்பு என்று ஜாதகன் சிற்ப்பான வாழ்க்கை வாழ்வான்.
62. ஒன்பதாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகன் அதீத செல்வமுடையவனாக இருப்பான். செல்வாக்கும், அதிகாரமுமுள்ள பல நண்பர்களை உடையவனாக இருப்பான். அவனுடைய தந்தையும் அப்படியே இருப்பார் நன்றாக இல்லாவிட்டால் நன்றி, விசுவாசமில்லாத நட்புக்களாலும், உறவினர்களாலும், சொத்து சுகங்களை இழக்க நேரிடும். மோசடிகளையும், துரோகங்களையும் சந்திக்க நேரிடும். அதனாலும் சொத்துக்களை இழக்க நேறிடும். ஜாதகனுடைய தந்தையார் ஆரம்ப காலங்களில் செல்வாக்கு உடையவராக இருந்தாலும், பின்னாட்களில் தாழ்வான நிலையை அடைவார். அவருடைய சொத்துக்களும் நில்லாது போய்விடும்
63. ஒன்பதாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் (If well placed): பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க நேறிடும். சிற்றின்ப வேட்டைகளில் ஈடுபட்டு, அதன் மூலமும் சொத்துக்களை இழக்க நேரிடும். நன்றாக இல்லாவிட்டால் ஏழ்மையான சூழல் நிலவும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டும். பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சில அமைப்பு உள்ளவர்களுக்குத் தந்தை சிறுவயதிலேயே இறந்திருப்பார். ஜாதகனுக்கு ஒரு பைசாக் கூட பணம் இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றிருப்பார். எது எப்படியோ இந்த ஒன்பதாம் அதிபதி என்று மட்டுமில்லை - எந்த வீட்டு அதிபதியும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வது உசிதமல்ல! பிரச்சினைதான். அது அங்கே வந்து அமரும் கிரகத்திற்கு உரிய வீட்டை முற்றிலும் பாதிக்கும்.
64. ஓன்பதாம் வீட்டில் குரு இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அரசியல் வாழ்க்கைக்கு அது மிகவும் நன்மையளிக்கும்
65. ஜோதிடவிதிகள் அனைத்தும் காரகன் அமர்ந்து உள்ள இடம் கிரக சேர்க்கை இப்படி பார்வை இப்படி பல சோதனை செய்து பலன் கூறவேண்டும். MUST TEST SUB-LOAD, STAR LOAD, AND RASI LOAD
நன்றி மேலும் விபரம் அறிய Call 88709 74887

தலைப்பு


பெயர்   இமெயில் முகவரி

ஜோதிட கருத்து/கேள்வி/தேவைகள் பதிவு செய்க இங்கே

 
தமிழில் TYPE செய்ய paNdiseeri என்று ஆங்கிலத்தில் TYPE செய்தால் பாண்டிசேரி என்று தமிழில் மாற்றிவிடும். ஆங்கிலம் வேண்டும் என்றால் KEYBOARD-ன் மேல் பகுதியில் FUNCTION KEY வரிசையில் ( F12 ) KEY –ஐ அழுத்தினால் ஆங்கிலம் TYPE செய்யலாம், திரும்பவும் அழுத்தினால் தமிழுக்கு மாறிவிடும். (சில BROWSER களில் இரண்டுமுறை ( F12 ) KEY –ஐ அழுத்த வேண்டி இருக்கும் எடுத்துக்காட்டு IE8, சில BROWSER களில் ஒருமுறை ( F12 ) KEY –ஐ அழுத்தினால் போதும்)

உங்கள் ஜோதிடம் 100% பளிதமாக இருக்கவும், உங்கள் ஜோதிட பலன் சொல் பளிக்கவும் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜோதிட சாப்ட்வேர்...


ஜோதிட சாப்ட்வேர் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் கோவிந்தன் 8870974887

16 ஜோதிட சாப்ட்வேர்
1 திருமண பொருத்தம்
2 ஜாதகம்
3 ஜாமக்கோள் ஆருடம்
4 சந்திர நாடி
5 பிருகு நாடி
6 மருத்துவ ஜோதிடம்
7 கர்மா பரிகாரம்
8 தாம்பூல பிரசன்னம்
9 கேபி
10 சோழிய பிரசன்னம்
11 தேவபிரசன்னம்
12 எண் கணிதம்
13 பெயர் பட்டியல்
14 ஜெம்ஸ்
15 பட்சி
16 டாரட்

ஜோதிட சாப்ட்வேர் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் கோவிந்தன் 8870974887


16 சாப்ட்வேர் மாடல் பார்க்க இங்கே தட்டி DOWNLOAD செய்யலாம்.


என் பெயர் கோவிந்தன் நான் புதுச்சேரி (பாண்டிச்சேரி) வசிக்கிறேன் என்னுடைய செல்எண் 91- 887 097 4887 எண்ணுக்கு கால் பன்னுங்க, பணம் செலுத்த வேண்டிய வங்கி எண் விபரம் அனுப்பிவைக்கிறேன், SOFTWARE உங்கள் இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுக்கு தேவைப்பட்டால் DVD-யில் பதிவு செய்து கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும்.


எனது செல் எண்ணிற்க்கு நேரடியாக கால் செய்யவும் 887 097 4887.ரசமணி | வாலை ரச மணி | தாரகை மணி | வல்ல மணி | பேத மணி | வக்கிர மணி | அஞ்சனம் | மாந்ரீகம் | சர்வ வசியமை | சர்வ அஞ்சனம் | குபேர  வசியமை | குபேர  அஞ்சனம் | காளிகா தேவி வசிய அஞ்சனம் | சிவசக்தி பூஜை அஞ்சனம் | சுதர்சன வசிய அஞ்சனமை | தாராதேவி அஞ்சனம் | நவமோகினி அஞ்சனம் | வசிய சஞ்சிவி அஞ்சனம்ஏவல் பில்லி சூன்யம் | ஏழரை சனி | 7 1/2 சனி | ஏழரை சனி பலன் | 7 1/2 சனி பலன் | சனி பெயர்ச்சி பலன் | அஷ்டமசனி | கண்டசனி | கண்டகுரு | அஷ்ட குரு |  அர்த்தாஷ்ட குரு | ராகு கேது | தசா பத்தி
ரசமணி | வாலை ரச மணி | தாரகை மணி | வல்ல மணி | பேத மணி | வக்கிர மணி | அஞ்சனம் | மாந்ரீகம் | சர்வ வசியமை | சர்வ அஞ்சனம் | குபேர  வசியமை | குபேர  அஞ்சனம் | காளிகா தேவி வசிய அஞ்சனம் | சிவசக்தி பூஜை அஞ்சனம் | சுதர்சன வசிய அஞ்சனமை | தாராதேவி அஞ்சனம் | நவமோகினி அஞ்சனம் | வசிய சஞ்சிவி அஞ்சனம்ஏவல் பில்லி சூன்யம் | ஏழரை சனி | 7 1/2 சனி | ஏழரை சனி பலன் | 7 1/2 சனி பலன் | சனி பெயர்ச்சி பலன் | அஷ்டமசனி | கண்டசனி | கண்டகுரு | அஷ்ட குரு |  அர்த்தாஷ்ட குரு | ராகு கேது | தசா பத்தி

ரசமணி | வாலை ரச மணி | தாரகை மணி | வல்ல மணி | பேத மணி | வக்கிர மணி | அஞ்சனம் | மாந்ரீகம் | சர்வ வசியமை | சர்வ அஞ்சனம் | குபேர  வசியமை | குபேர  அஞ்சனம் | காளிகா தேவி வசிய அஞ்சனம் | சிவசக்தி பூஜை அஞ்சனம் | சுதர்சன வசிய அஞ்சனமை | தாராதேவி அஞ்சனம் | நவமோகினி அஞ்சனம் | வசிய சஞ்சிவி அஞ்சனம்ஏவல் பில்லி சூன்யம் | ஏழரை சனி | 7 1/2 சனி | ஏழரை சனி பலன் | 7 1/2 சனி பலன் | சனி பெயர்ச்சி பலன் | அஷ்டமசனி | கண்டசனி | கண்டகுரு | அஷ்ட குரு |  அர்த்தாஷ்ட குரு | ராகு கேது | தசா பத்தி