| என்றாரே சாற்றினதோர் நூலேழில்தான் ஏழுலட்சம் கிரந்தத்தின் போக்கெல்லாந்தான் கன்றாரே கரும்பான பாகுபோல் திரட்டி கருவெல்லாங் கண்டுணர்ந்த படியேசொன்னார் தன்றாரே தந்தை காலாங்கிநாதர் தாமுமோசகல நூல்பார்த்துத் தேர்ந்து அண்டாரே யகண்டம்போலஞ்சு காண்டஞ்சொன்னார் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் அலாவினேனே |