| போடப்பா வெருகினுட கிழங்கில்பத்து புளியரனைக் கிழங்குதனில் பத்துவீசைபோடு நாடப்பா பின்பெடுத்து எண்ணெடீநுகுத்தியுருக்கி நலமாகக் கிண்ணியைபோல் வார்த்துக்கொண்டு ஊடப்பா நேர்வாளந் தயிலம்வாங்கி யுத்தமனே சாரமது காசுஐந்து நீடப்பா துரிசியது காசுஐந்து நிலையான கல்லுப்புக் காசுஅஞ்சே |