| திறந்திடாதிருந்தாக்கால் சரக்குவைப்பை ஜெகத்திலே வாதம்பொடீநுயாகுமென்று இறந்திடாதிருக்க வெளியாகச்சொன்னேன் ஏழைமதிபோகாதே பார்க்கவென்றால் மறந்திடாக் கருவையெல்லாம் உன்னிப்பாரு மாயமாம் வாசினையால் மனம்புண்ணாகும் பிறந்திடாதிருக்கவென்றால் காயசித்திபண்ணு பெரியோர்கள் பதம்போற்றிக் கருவைக்கேளே |