| போடவே வெடியுப்பு சீனம்ரண்டு பொலிவாக வகைக்குமொரு பலமும்போட்டு வாடவேபசுவின்பால் படிதானைந்து மாசற்ற எலுமிச்சப் பழச்சாறுசேரே தேடவே கலக்கியொன்றாடீநு வைத்துக்கொண்டு திறமாகச் சட்டியிலே படிதான்வார்த்து நீடவே சீலைகட்டி அதின்மேற்கெந்தி நினைவாகப் பரப்பியல்லோ மேற்கட்டிமூடே |