| ஆமென்றபாஷானம் மூன்றதானும் அன்றெறித்தார் மன்மதனை ஈசன்தானும் ஓமென்ற நெற்றிக்கண் சுவாலைக்கொக்கும் உத்தமனே சரக்குக்குக் காலகாலன் போமென்ற வெகுதீரன் யெட்டியோடும் போனபின்பு கற்பகமாம் விருஷமப்பா வேமென்ற காலனுண்ட கற்பமப்பா விரைந்துண்ண காயசித்தி மண்டலத்தில்தானே |