| போட்டுடனே சூதந்தண்ணீர் போலேயாகும் போக்கான பலரசம் பரிட்சை செம்மை காட்டுடனே நாலுபலம் நிறுத்துக்கொண்டு நலமான தங்கமது பலந்தானொன்று பூட்டுடனே கல்வத்தில் இதனைப் போட்டு புகழான கருந்துளசி சாறுவிட்டு தொட்டுடனே நாள்மூன்று அரைத்துபின்பு துடியான கெந்தகத்தை சேருபோடே சந்திரோதயம் |