| இட்டேனே நவகோடி ரிஷியாருக்கு எழிலான பதினெண்பேர் சித்தருக்கும் சட்டமுடன் நாற்பத்தி எட்டுபேர்கள் சதுரான முனிவருக்கு சரணஞ்சொன்னேன் திட்டமுடன் மனோன்மணியாள் பாதம்போற்றி திகழான சுடரொளியாஞ் சோதிபோற்றி அட்டதிசை தான்புகழுங் காலாங்கிநாதர் வையனே யுன்பாதம் போற்றிதானே |