| பணிந்தேனே பலிப்பாணி மன்னவாகேள் பாருலகில் கும்பமென்ற யீசருக்கு துணிந்துமே யவர்பாதந் தொழுதுபோற்றி துப்புரவாடீநு சரணங்கள் அதிகஞ்சொன்னேன் கணிதமென்ற மூலத்தின் ஈசருக்கு கனகாபிஷேகமுடன் சரணஞ்சொன்னேன் மணிபோன்ற பாதமதைத் தொழுதுபோற்றி மன்னவனே சதாகாலம் நினைப்பேன்காணே |