| போற்றியே தேறையர் சரணஞ்சொன்னேன் புகழுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி ஆற்றலுடன் பூதனாநந்தருக்கு வப்பனே யவர்பாதந் தொழுதுபோற்றி மாற்றலுடன் புண்ணாக்கு ஈசருக்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன் தேற்றமுடன் இடைக்காடர் சரணஞ்சொன்னேன் தெளிவுடனே யவர்பாதந் தொழுதேன்தானே |