| அன்றான சாத்திரமாங் கோர்வையப்பா வப்பனே பனிரெண்டு காண்டஞ்சொன்னார் குன்றான மலைபோலே கோடித்தங்கம் கொட்டினார் பனிரெண்டு காண்டத்துள்ளே சென்றிடவே வைத்தியமும் வாதமார்க்கம் செயலான யோகமுதல் ஞானமார்க்கம் வென்றிடவே மாந்திரீக மாரணவேதம் வேண்டியதோர் கருமானம் மிகவுண்டாமே |