| பாரேதான் அகஸ்தியனார் கோடிநூல்கள் பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த நேரேதான் பெருநூலின் மார்க்கமெல்லாம் நேர்மையுள்ள வென்னூல்போல் விள்ளலாகும் சீரேதான் பனிரெண்டு காண்டமாக சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு வேரேதான் சாஸ்திரங்கள் பார்ப்பதுண்டோ பார்த்தாலும் பெருநூலுக் கொவ்வாதன்றே |