| உண்மையாம் எந்நூலைக் கண்டறிந்து வுத்தமனே கும்பமுனி நூலைப்பாரு திண்ணமுடன் பனிரெண்டு காண்டம்பாரு தீர்க்கமுடன் ரகசியங்கள் எல்லாம்விள்ளும் நன்மைபெற மோட்சவழி கதியேகொள்வார் நாதாந்த கும்பமுனி முன்னேநிற்பார் தண்மையுள்ள சாத்திரந்தான் பெருநூலப்பா தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே |