| தந்தாரே எந்தனுக்குக் கோடியாக சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும் அந்தமுடன் எந்தனுக்கு வதிதமார்க்கம் வப்பனே தாமுரைத்துப்போகவென்று இந்தமானிலத்திலுள்ள மகிமையெல்லாம் ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு விந்தையுடன் பாடிவைப்பேன் சத்தகாண்டம் விண்ணுலகம் மண்ணுலகம் விடங்கொள்ளாதே |