| புதுமையாம் வெகுகோடி சித்தர்தாமும் புகழான வுலகுதனில் கோடாகோடி கதுமையுள்ள தேவரிஷி இருந்தாரல்லோ காசினியில் அதிசயங்கள் கண்டேனென்றும் பதுமைமுகம் அஷ்டதிக்கு பரிசம்யாவும் பார்த்துவந்த வுறுதியதும் கூறவில்லை வதுவைபுரி சுரக்காயங் கரிக்காயென்ற வார்த்தையது போலலைவாடீநு நவின்றிட்டாரே |