| தானான தீர்த்தமது என்னசொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி தம்பிரானே மானான தாமரையின் தீர்த்தங்கண்டேன் மகத்தான ஞானமென்ற தீர்த்தங்கண்டேன் வேனான யாதவமாந் தீர்த்தங்கண்டேன் வெளியான வமுர்தமென்ற தீர்த்தங் கண்டேன் பானான வசுவனியாந் தீர்த்தங்கண்டேன் பாங்கான வற்புதமாம் தீர்த்தமாமே |