| தானான குசலமென்ற தீர்த்தங்கண்டேன் தாக்கான யமுனையென்ற தீர்த்தங்கண்டேன் கோனான வகஸ்தியனார் தீர்த்தங்கண்டேன் குணமான வன்னியனார் தீர்த்தங்கண்டேன் தேனான மல்லியென்ற தீர்த்தங்கண்டேன் தெளிவான வனுமாரின் தீர்த்தங்கண்டேன் பானான காசியென்ற தீர்த்தங்கண்டேன் பாங்கான கைலங்கிரி தீர்த்தம்பாரே |