| இருக்கவே இன்னம்வெகு மகத்துவங்கள் எழிலான புலிப்பாணி கண்ணியவானே பொருக்கவே வையகத்தின் மகிமையெல்லாம் பகட்டினேன் கணக்குண்டோ லக்கோயில்லை பெருக்கவே துகைகண்டு விதிகண்டு பேரான ஸ்தலமகிமை யாவுங்கண்டு குருக்கவே திசையெட்டும் மதிக்கும் நான்கும் கூரான தேவகோட்டை கூறுவேனே |