| கெதியென்று காலாங்கி கேட்குங்காலம் கெடியான பலராமர் ரிஷியார்தாமும் பதிதனையைத் தேடிவந்த ரிஷியாருக்கு பட்சமுடன் ஞானோபதேசங்கூறி மதிபோன்ற மகதேவர் காலாங்கிக்கு மார்க்கமுடன் உலகவதிசயங்களெல்லாம் இதிகாசபுராணமென்னும் மறைப்பையெல்லாம் யிஷ்டமுடன் மனதுவந்து போதித்தாரே |