| இருந்தாரே இன்னமொரு இணக்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி புனிதவானே திருந்தவே திரேதாயினுகத்திலப்பா தீர்க்கமுடன் காலாங்கி நாதர்தாமும் அருந்தவசி பலராமரென்னுஞ்சித்து வம்மலையில் நெடுங்காலந் தவசிருக்க குருந்தமெனும் மரக்கலப்பை தோளிலேந்தி குணமான ரிஷியாரின் தவங்கண்டாரே |