| இருந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி இன்புள்ளானே பொருந்தவே திரேதியினுகத்திலப்பா பொங்கமுடன் காலாங்கி நாதர்தாமும் திருந்தியே கண்டதொரு வதிசயங்கள் தீர்க்கமுடன் எந்தனுக்கு சொன்னநீதி வருந்தவே நரசிங்க ரிஷியார்தன்னை வளப்பமுடன் கண்டதொரு வுண்மைபாரே |