| இட்டாரே வராகரிஷி முனிவர்தானும் எழிலான காலாங்கி தன்னைக்கண்டு விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் விருப்பமுடன் எந்தனையும் காணலாச்சு சட்டமுடன் உந்தனுக்கு உபதேசங்கள் சாங்கமுடன் போதிப்பேன் என்றுசொல்லி திட்டமுடன் உலகத்தில் மகிமையெல்லாம் தீர்க்கமுடன் காலாங்கிக் கோதினாரே |