| கண்டாரே நெடுங்காலந் தவசிருக்கும் கருவான ரிஷியாரை மனதுவந்து தெண்டமுடன் காலாங்கி நாதர்தாமும் தேற்றமுடன் ரிஷியாரைக் கேட்கும்போது சண்டமாருதம்போலே ரிஷியார்தாமும் சட்டமுடன் மனதுவந்து சாற்றலுற்றார் திண்ணமுடன் திரேதாயி னுகத்திலப்பா திருவாண்டு முதல்வருஷஞ் சமாதிகாணே |