| இருந்தாரே நெடுங்காலம் காலாங்கிநாதர் எழிலான மலைமீதில் என்னசொல்வேன் பொருந்தவே காயாதி கற்பங்கொண்டு பொங்கமுடன் வுலகமதின் மகிமையெல்லாம் திருந்தவே கண்ணினாற் கண்டுமல்லோ தீர்க்கமுடன் தன்மனதில் உள்ளடக்கி அருந்தவத்தில் உதித்ததொரு ரிஷிகள்தேவர் வனேகரிட மகிமையெல்லாம் பார்த்திட்டாரே |