| கொள்ளவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி குணமுள்ளானே வெள்ளமுர்தமானதொரு யெந்தன்சாமி தெளிவான காலாங்கி நாதர்தாமும் உள்ளபடி திரேதாயி னுகத்திலப்பா வுத்தமனே தாமிருந்த வண்மையெல்லாம் கள்ளமின்றி இகழாமல் யானுரைப்பேன் கைலாச புலிப்பாணி கருவாடீநுக்கேளே |