| கண்டாரே யின்னமொரு கருமானங்கேள் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே அண்டரண்ட தேசமெல்லாஞ் சுற்றிவந்தேன் வப்பனே பாஷாண விளைவுகண்டேன் துண்டரிகமானதொரு விளைவுமார்க்கம் துப்புரவாடீநு யான்கண்டு விடமுங்கண்டேன் சண்டமாருதம்போலே விளைவுகண்டேன் தண்மையுள்ள பாஷாண விளைவுகேளே |