| பாரேதான் வையகத்தின் மகிமையெல்லாம் பட்சமுடன் காலாங்கிநாதர்தாமும் சீரேதான் உந்தமக்கு உபதேசங்கள் செடீநுதுவைத்த படியாலே தோஷமில்லை நீரேதான் குளிகையது பூண்டுகொண்டு நீடாழி யுலகமெலாஞ் சுற்றிவந்து கூரேதான் மகிமையெல்லாம் அறிந்துகொண்டீர் கொற்றவனார் காலாங்கி கடாட்சந்தானே |