| பார்த்திட்டு விழிகொண்டு கஞ்சமலைசித்தர் பத்துயுகம் ஆரூடச்சமாதியிலேநின்றார் ஏர்த்திட்ட பொற்றலையார் கொங்கணர்தானப்பா ஏழுயுகம் குளிகைகட்டி வாதம்பார்த்தார் வார்த்திடவே பதஞ்சலிதான் கரந்தையுண்டு கைகொட்டிச் சிதம்பரத்தில் நடனம்கண்டார் போர்த்திட்ட கொல்லனுட கோவையுண்டு போகர்முனியென்று சொல்லிப்புலகித்தேனே |