| மயங்கியதோர் எந்தனுக்கு மன்னாகேளு மகத்தான காலாங்கி கிருபையாலே நயம்படவே வித்தையது யானுங்கண்டு நாதாந்த சித்தொளிவின் ஒளியுங்கண்டு ஜெயம்பெறவே வாதமென்ற வேதைதன்னை சேர்வையுடன் உந்தனுக்கு யானுந்தந்தேன் பயப்படவே யெந்நாளும் பதாம்புயத்தை பணிந்துமல்லோ வசனித்து துதிப்பாடீநுதானே |