| உண்ணவே தேகமெனும் கோட்டைதன்னில் வுத்தமனே உட்கோட்டை யேழுகோட்டை நண்ணவே துவாரமது வொன்பதாகும் நலமான பஞ்சேந்திர மைந்துமாகும் திண்ணவே யுடல்பொருளாவியந்தம் தீர்க்கமுள்ள ஏழுசுற்று கோட்டைக்குள்ளே வண்ணமுடன் கலையதுதான் முப்பத்திரண்டு வளமான இடைகலையின் கலைதான்ரெண்டே |