| பண்பான வீரமணி தனையெடுத்து பார்வேந்தா வெள்வங்கஞ் சேர்தானப்பா திண்ணமுடன் தானுருக்கி குகையிலிட்டு தீரமுடன் வீரமணி தனையெடுத்து அண்ணலார் பதம்போற்றி யடிபணிந்து வப்பனே குளிகையது எடுத்துமைந்தா வண்ணமுடன் வங்கமது வுருகும்போது வளம்பெறவே குளிகைதனைப் பொதிந்திடாயே |