| கண்டதொரு நாதாந்த சித்துதாமும் கனமுடனே யுந்தனைத்தான் போற்றுவார்கள் மண்டலத்து ராஜாதி ராஜர்தாமும் மகாவீரனென்றல்லோ மதிப்பார்தாமும் கொண்டல் வண்ணன் அச்சுதனார் கிருஷ்ணாவதாரன் குவலயத்தில் கொண்டதொரு குளிகையென்பார் தெண்டிரை சூடிநமாண்பரெல்லாம் உம்மையல்லோ தேர்ந்ததொரு சித்துமுனி என்பார்பாரே |